#INDvsAUS || லபுஸ்சேன் கனவை காலி செய்த ஜடேஜா., டக் அவுட் ஆன கீரின்., சற்றுமுன் களநிலவரம்.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடன் டெஸ்ட் தொடர் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போதுவரை 2 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளது. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி இன்று சிட்னியில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரிகளில் ஒருவரான டேவிட் வார்னர் 8 பந்துகளை சந்தித்து 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 7.1 ஓவர்களில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சுமார் 2 மணி நேரம் தடைப்பட்டது. 

பின்னர் தொடங்கிய ஆட்டத்தில், அறிமுக வீரர் வில் புகோவ்ஸ்கி தனது அதிரடியை காட்ட தொடங்கினார். தனது முதல் சர்வேதச டெஸ்ட் போட்டியில் முதல் அரை சதத்தையும் அவர் கடந்துள்ளார். 

இந்திய அணி சார்பாக சர்வேதச கிரிக்கெட் போட்டியில் களமிறங்கியுள்ள வேகப்பந்து வீச்சாளர் நவதீப் சைனி தனது முதல் விக்கெட்டை எடுத்துள்ளார். சைனி வீசிய மூன்றாவது ஒவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணியின் அறிமுக வீரர் வில் புகோவ்ஸ்கி LBW விக்கெட் கொடுத்து வெளியேறினார். வில் புகோவ்ஸ்கி (62 ரன்கள், 110 பந்துகளுக்கு).

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்து இருந்தது. இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது முதல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சதம் அடித்து விடுவேன் என்று ஆடிய மார்னஸ் லபுஸ்சேன் 91 ரன்கள் சேர்த்த போது ஜடேஜா பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மேத்யூ வேட் 13 ரன்களில் ஜடேஜா பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கேமரூன் கிரீன் ரன் ஏதும் எடுக்காமல் பும்ரா பந்து வீச்சில் டக் அவுட் ஆனார்.

தற்போது களத்தில் ஸ்டீவன் சுமித் மட்டும் 78 ரன்கள் எடுத்து நிதானமாக ஆடி வருகிறார். தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INDvsAUS 3rd test 2day 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->