டோனியை இப்படி பண்ணது தவறு!! கொதித்தெழுந்த கங்குலி, லட்சுமண்!! - Seithipunal
Seithipunal


நேற்று நடந்த உலககோப்பை அரையிறுதி போட்டியில்முன்னாள் கேப்டன் டோனியை 7 வது வீரராக களம் இறக்கியது தொடர்பாக விமர்சனம்  எழுந்த நிலையில். ரி‌ஷப்பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு முன்னதாக 4-வது வீரராக டோனியை களம் இறக்கி இருக்க வேண்டும் என கருத்து சமூகவலைகளங்களில் எழுந்த  நிலையில் டோனியை முன்னதாக ஆடியிருந்தால் விக்கெட் சரிவை தடுத்து இருப்பார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் 

முன்னாள் கேப்டன் கங்குலி இந்திய அணியின் தோல்வி தொடர்பாக கூறியதாவது:-

ரன் சேஸ் செய்யும் கட்டத்தில் டோனியை 7-வது வீரராக களமிறக்கிய முடிவு மிகவும் தவறானது. அவரை முன்னதாக களம் இறக்கி இருக்க வேண்டும். அவர் முன்னதாக ஆடியிருந்தால் விக்கெட் சரிவை தடுத்து இருப்பார். பாண்டியா, தினேஷ் கார்த்திக் போன்றோருக்கு கடைசிகட்ட ஓவர்கள் தான் சரியாக இருந்து இருக்கும் என கங்குலி தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான வி.வி.எஸ்.லட்சுமண் இது தொடர்பாக கூறியதாவது:-

டோனியை மிகவும் பின் வரிசையில் 7-வது வீராராக களம் இறக்கியது மிகவும் தவறான முடிவு எனவும்  தினேஷ் கார்த்திக் ஆட்டம் இழந்த பின்னர்  ஹர்திக் பாண்டியாவுக்கு முன்னதாக அவரை களம் இறக்கி இருக்க வேண்டும்.

ரி‌ஷப்பந்த், டோனி, இணைந்து இருந்தால் ஆட்டத்தின் தன்மை மாறி இருக்கும். இளம் வீரரான ரி‌ஷப்பந்த்துக்கு டோனி சரியான ஆலோசனை வழங்கி களத்தில் ஆட வைத்துயிருப்பர். என லட்சுமண் கூறினார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian team wrong decision


கருத்துக் கணிப்பு

பட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..!!
கருத்துக் கணிப்பு

பட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..!!
Seithipunal