புதிய சாதனை படைத்த இந்திய அணி.. பேட்டிங்கில் அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்தது. 

நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சனகா 74 ரன்கள் எடுத்தார். சண்டிமல் 22 ரன்கள் எடுத்தார். 

இதையடுத்து, 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 2வது ஓவரில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. கேப்டன் ரோகித் சர்மா 5 ரன்களில் வெளியேறினார். அதன்பிறகு சஞ்சு சாம்சன் 18 ரன், தீபக் ஹூடா 21 ரன், வெங்கடேஷ் அய்யர் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

ஆனால் மறுமுனையில் அதிரடியாக அடி ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதத்தை கடந்தார். அவருடன் ஜடேஜா தனது பங்களிப்பை வழங்கி 16.5 ஓவர்களில் 148 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. இதில், ஸ்ரேயாஸ் ஐயர் 45 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 15 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆகாமல் இருவரும் கடைசி வரை களத்தில் நின்றனர். இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இதன்மூலம் தொடர்ந்து 12 சர்வதேச டி20 போட்டியில் வென்ற இந்திய அணி நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கைக்கு எதிரான தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian team world record


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->