வெஸ்ட் இண்டீஸ் தொடர் இந்திய அணி அறிவிப்பு! பல அதிரடி மாற்றங்களை செய்த இந்திய அணி! - Seithipunal
Seithipunal


மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக இந்திய அணி மூன்று டி 20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான அணியை தேர்வு செய்ய பிசிசிஐ தேர்வு செய்து அறிவித்துள்ளது. 

தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மாவின் பணிச்சுமை, தேர்வுக் குழு கூட்டத்தின் போது முக்கிய விவாதமாக இருக்கும் என கூறப்பபட்டது. ஆனால் அவர் அணியில் துணை கேப்டனாக இடம் பெற்றுள்ளார். பார்ம் இல்லாமல் தவான் நீக்கப்படுவார் என பார்த்தால் அவரும் இருக்கிறார். 

வங்கதேச தொடரில் ஆடாத கோலி மீண்டும் கேப்டனாக களமிறங்குகிறார். புவனேஷ்குமார், ஜடேஜா அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இளம் வீரர்கள் கில், சஞ்சு சாம்சன், ராகுல் சாஹர், கலீல் அஹமது, ஷரதுல் தாக்குர் , க்ருனால் பாண்டியா என அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

T20 அணி : விராட் கோலி, தவான், ரோஹித் ஷர்மா, ஷ்ரேயஸ் ஐயர், மனிஷ் பாண்டே, லோகேஷ் ராகுல், ரிஷப் பாண்ட், வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே, யுஸ்வென்றே சாஹல்,  தீபக் சாஹர், குல்தீப் யாதவ், ரவீந்திர 
ஜடேஜா, புவனேஷ் குமார், முகமது ஷமி
 
ஒருநாள் அணி : விராட் கோலி, தவான், ரோஹித் ஷர்மா, ஷ்ரேயஸ் ஐயர், மனிஷ் பாண்டே, லோகேஷ் ராகுல், ரிஷப் பாண்ட், கெதர் ஜாதவ், சிவம் துபே, யுஸ்வென்றே சாஹல்,  தீபக் சாஹர், குல்தீப் யாதவ், ரவீந்திர 
ஜடேஜா, புவனேஷ் குமார், முகமது ஷமி


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian team squad to west indies series


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->