இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர்.! வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்ந்தெடுப்பதற்கு தற்போது தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டது. வருகிற 30-ஆம் தேதி கடைசி தேதியாக குறிப்பிட்டு இருந்தது. இதில் மீண்டும் ரவிசாஸ்திரி பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. 

இதுவரை சச்சின் மற்றும் கங்குலி, லட்சுமணன் ஆகியோர் கொண்ட கமிட்டிதான் பயிற்சியாளரை தேர்ந்தெடுத்து கிரிக்கெட் வாரியத்திற்கு பரிந்துரை செய்தது. ஆனால் சச்சின் மற்றும் கங்குலி உள்ளிட்டோர் மீது இரட்டை ஆதாய பிரச்சினை கிளம்பியதால் இந்த முறை அவர்கள் பயிற்சியாளர் தேர்வு பணியை செய்ய மாட்டார்கள் என்றும் 

இவர்களுக்கு பதிலாக இந்திய அணியின் பயிற்சியாளர் தேர்வு செய்ய முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் இடைக்கால கமிட்டி அமைக்கப்பட்டது. பயிற்சியாளரை தேர்வு செய்யும் கமிட்டியில் அன்ஷுமன்,  சாந்தா ரங்கசாமி ஆகியோரும் இடம் பெற்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நீட்டிப்பார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. புதிய பயிற்சியாளராக  2,000 பேர் விண்ணப்பித்த நிலையில், ரவிசாஸ்திரியை பிசிசிஐ ஆலோசனை குழு ஒருமனதாக தேர்வு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian team head coach


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->