இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்கு ஒய்வு! முன்னணி வீரர் நீக்கம்!  - Seithipunal
Seithipunal


இந்திய மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இடையேயான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடர்கள் முடிவுற்ற நிலையில், இந்திய அணி புதிய வருடத்தில் புதிய தொடருடன் தொடங்க இருக்கிறது. 

ஜனவரி 5ஆம் தேதி தொடங்கும் இந்தியா இலங்கை அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி ஆனது உத்தேசமாக வெளியாகியுள்ளது.  அதன்படி 2019 ஆம் வருடம் தொடர்ச்சியாக அனைத்து போட்டிகளையும் விளையாடிய இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஆகிய இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக தற்போது ஓய்வில் இருந்து வரும் ஷிகர் தவான் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா அணிக்கு திரும்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அதைப்போல 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடருக்கு பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த போட்டித் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான போட்டியில் ஓய்வு எடுக்கும் ரோகித் சர்மா, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு அணிக்கு திரும்புகிறார். ஆனால் முகமது சமி திரும்பவில்லை. 

மேலும் அண்மையில் காயமடைந்து அணியில் இருந்து வெளியேறிய தீபக் சஹர் இரண்டு தொடர்களிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மற்றபடி அணியில் பெரியதாக மாற்றமில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிய அதே 20 ஓவர் மற்றும் 50 ஓவர் போட்டி தொடருக்கான அணியே அறிவிக்கப்பட்டுள்ளது

இலங்கைத் தொடருக்கான இந்தியாவின் டி 20 ஐ அணி: விராட் கோலி , ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, யூஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, நவ்தீப் சைனி, மனீஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன். #INDvSL

ஆஸ்திரேலியா தொடருக்கான இந்தியா ஒருநாள் அணி: விராட் கோலி (சி), ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பந்த், கேதார் ஜாதவ், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதேவ், நவ்தீப் சைனி, யூஸ்வேந்திர சாஹல், ஷார்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா. #INDvAUS


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian team for srilanka t20 series and Australia ODI series


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->