இந்திய அணியில் அறிமுக வீரராக மாயஜாலா மாயங் மார்கண்டே! நட்சத்திர வீரர்களே இல்லாமல் களமிறங்க தயாரான இந்திய அணி! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணி  ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் உள்ளிட்ட நாடுகளில் மேற்கொண்ட சுற்றுப் பயணம் முடிந்த நிலையில், இந்திய அணி இந்தியாவில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டு 20 ஓவர் போட்டி, மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. 

இந்த 20 ஓவர் போட்டிகள் வருகிற 24 மற்றும் 27-ந்தேதிகளில் விசாகப்பட்டினம், பெங்களூரில் நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய வீரர்கள் தேர்வுக்கான கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது.  எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு கூடி இந்த தொடருக்கான வீரர்களை தேர்வு செய்தது.

இருபது ஓவர் போட்டிக்கான அணி : விராட் கோலி, ரோஹித், KL ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பாண்ட், தினேஷ் கார்த்திக், MS டோனி (WK), ஹர்டிக் பாண்டியா, கருணாள் பாண்டியா, விஜய் ஷங்கர், சாஹல், ஜஸ்பிரிட்  பும்ரா, உமேஷ் யாதவ் , சித்தார்த் கவுல் , மயங்க மார்கண்டே.  

ஒருநாள் போட்டிகளில் இருந்து கழட்டிவிடப்பட்ட தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இருபது ஓவர் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல தொடர்ச்சியாக சொதப்பிய லோகேஷ் ராகுல் மீண்டும் அணியில் இணைக்கப்ட்டுள்ளார். பந்துவீச்சில் நட்சத்திர வீரர்களான புவனேஷ்வர், ஷமி, குல்தீப் க்கு ஒய்வு கொடுக்கப்பட்டு சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ், மாயங் மார்கண்டே அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். 

அணியில் ஆல் ரவுண்டர்களாக மூவர் இணைக்கப்பட்டுள்ளனர். பாண்டியா சகோதரர்களுடன் தமிழக வீரர் விஜய் ஷங்கரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். 

English Summary

INDIAN TEAM FOR AUSTRALIA T20I SERIES


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal