டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்! இந்திய அணி அறிவிப்பு! ராகுல், அகர்வால் நீக்கம்!  - Seithipunal
Seithipunal


ஜூன் 18 அன்று ஆரம்பமாக உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்  இறுதி போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி சவுத்தாம்டனில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய  அணியானது அறிவிக்கப்ட்டுள்ளது. 

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில், பல சவால்களை தாண்டி,  இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. கிரிக்கெட் உலகம் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த போட்டி குறித்து பல்வேறு வியூகங்களும், ஆருடங்களும் சொல்லபட்டு வருகிறது. 

இந்த போட்டிக்கான அணியை தேர்வு செய்வதில் கடுமையான குழப்பம் நிலவியது. யாரை நீக்குவது, யாரை சேர்ப்பது என விடைதெரியாமல் விழித்தனர். ஒருவழியாக அணியை அறிவித்துள்ளார்கள். இந்த தேர்வின் போது, ராகுல், அகர்வால் நீக்கம் உள்ளிட்ட கடுமையான முடிவுகளையும் எடுக்க நேர்ந்துள்ளது. 

15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 6 பேட்ஸ்மேன்கள், இரண்டு விக்கெட் கீப்பர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர். 

அணி விபரமானது,  விராட் கோலி (கேப்டன்),  ரகானே (துணைக் கேப்டன்), ரோகித் சர்மா,  ஷுப்மான் கில்,  புஜாரா, ஹனுமா விஹாரி,  ரிஷப் பண்ட்,  சகா, அஷ்வின்,  ஜடேஜா,  பும்ரா,  இஷாந்த் சர்மா,  முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian team announced to WTC Final


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->