அதிரடியாக சதமடித்து அசத்திய தோனி! ராகுலும் சதம்! சிக்ஸர் மழை பொழிந்ததால் ரசிகர்கள் உற்சாகம்!   - Seithipunal
Seithipunal


உலக கோப்பை தொடருக்கான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் இன்று இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆடுகளம் ஈரப்பதத்துடனும் மற்றும் அவ்வப்போது மழை வந்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

ஆட்டம் தொடங்கியது முதல் பந்து வீச்சுக்கு ஆடுகளம் சாதகமாக இருந்த நிலையில், தொடக்க வீரர்கள் ரோகித் சர்மாவும், ஷிகர் தவனும் தடுமாற்றம் கொண்டார்கள். ஷிகர் தவான் 9 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு மறுமுனையில் விராட் கோஹ்லி ஓரிரு ரங்களாக  அடிக்க மறுமுனையில் ரோகித் சர்மா விக்கெட்டை காப்பாற்றிக் கொள்வதில் தீவிரமாக இருந்தார். 42  பந்துகளில் 19  ரன்களை மட்டுமே எடுத்து இருந்த ரோகித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறினார். 

அதன் பின்னர் களமிறங்கிய லோகேஷ் ராகுல், கேப்டன் விராட் கோலிக்கு ஒத்துழைப்பு அளித்ததுடன் அதிரடியாக விளையாடினார். கோலி 5 பவுண்டரிகளுடன் 46 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு காயத்தில் இருந்து மீண்ட விஜய்சங்கர் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவருக்கு அடுத்து விக்கெட் கீப்பரும் அணியில் மூத்தவருமான தோனி களமிறங்கினார். முதலில் நிதானமாக விளையாட, பிறகு ராகுலுடன் இணைந்து இருவரும் பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாசித் தள்ளினார். 

முதலில் ராகுல் சதம் அடித்த பிறகு தோனி 73 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். ராகுல் 99 பந்துகளில் 12 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மகேந்திர சிங் தோனி 78  பந்துகளில் 8 பவுண்டரிகள் 7 சிக்சருடன் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதற்கிடையே வந்த ஹர்டிக் பாண்டியா 11  பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதி ஓவரில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 4 பந்துகளை சந்தித்து 11 ரன்கள் எடுத்திருந்தார். தினேஷ் கார்த்திக் 5 பந்துகளில் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்துள்ளது. வங்கதேச அணி தரப்பில் ரூபெல் ஹுசைனும்,  ஷாகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian players scored century against Bangladesh


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->