இந்திய அணியின் தேர்வு குழுவை.! முட்டாள்கள் என விமர்சித்த முன்னாள் வீரர்.!! - Seithipunal
Seithipunal


இந்திய அணி நடந்த உலக கோப்பையில் அரை  இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியது. இதையடுத்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுடன் தொடர்களில் விளையாட உள்ளது.

இந்த போட்டிக்கான இந்திய அணி தேர்வு 17 மற்றும் 18 தேதிகளில் கலந்து ஆலோசிக்கப்பட்டு  பின்னர் இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர் இது குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார் அதில் கூறியதாவது: இந்திய அணி உலக கோப்பை தொடரில் தோல்வி அடைந்ததில் சில முக்கியக் காரணங்கள் உள்ளன அதிலும் தேர்வில் உள்ள தவறான விடயங்கள் நான் குறிப்பிட வேண்டும் என்று கூறியுள்ளார். அதில் அணியில் தவான் மட்டும் ஷங்கர் காயம் அடைந்த பிறகு அவருக்கு பதிலாக அம்பதி ராய்டுவை  அணியில் சேர்த்திருக்க வேண்டும் ஆனால் அவரை தேர்ந்தெடுக்காமல் ரிஷப் பண்ட் தேர்வு செய்தது தவறான முடிவாகும்.

மேலும் அரையிறுதியில் தோனியை ஏழாவது வீரராக களம் இறங்கியதால் அந்த போட்டியில் தோல்வியுற்றோம் என்றும் கூறினார் ஒருவேளை இது முன்னரே இறங்கி இருந்தால் அந்த போட்டி வெற்றி பெற்றிருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

இந்த நிலையில் அடுத்து மேற்கிந்திய தீவு எதிரான தொடரில்  அணி தேர்வு என்பது தேவையற்றது மற்றும் முட்டாள்தனமானது  இப்போது இருக்கும் அணியே மேற்கிந்திய தீவுகள் அணியை  எளிதாக எதிர்கொள்ளும். இந்த அணியே மீண்டும் விளையாடலாம் என்று கடுமையாக தேர்வு குழுவை  சாடியுள்ளார் கவுதம் கம்பீர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian player says about selection comity


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->