இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஓய்வு.! அதிகாரபூர்வ அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். ரசிகர்கள் அதிர்ச்சி.

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடியான ஆட்டக்காரர் யார் என்று கேட்டால் எல்லோரும் கண்டிப்பாக யுவராஜ் சிங்கைதான் கூறுவர்கள். அந்த அளவிற்கு இந்திய அணியில் இவர் மிக முக்கியமான வீரராக இருந்தவர். இந்திய அணிக்காக இவர் தன் வியர்வையை ரத்தமாக கொடுத்து போட்டிகளில் விளையாடி உள்ளார்.

யுவராஜ் சிங் இங்கிலாந்துக்கு எதிராக 6 சிக்ஸ் அடித்தது. உலகக் கோப்பை 2011 போட்டியை வென்றது. இவர் எட்டாத சாதனையே கிடையாது. கேன்சர் வந்திருந்த நிலையில் உலகக் கோப்பையில் வென்று சில மாதங்களில் இவருக்கு கேன்சர் இருப்பது தெரிந்தது. இதனால் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து சிறிய இடைவேளை  எடுக்க போவதாக அறிவித்தார். ஆனால் அது அவரின் கிரிக்கெட்  வாழ்க்கையில் மிகப்பெரிய இடைவேளை இருந்தது.

அதன் பிறகு மீண்டும் பழைய யுவராஜ் சிங்காக அவரால் திரும்ப முடியவில்லை. ஒரு வருடம் யுவராஜ் சிங் சிகிச்சை பெற்றார். அதன்பின் முழுவதுமாக குணம் அடைந்து மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார். அவர் பயிற்சிக்கு திரும்பினாலும் கூட கொஞ்சம் கூட பழைய நிலைமைக்கு திரும்ப முடியவில்லை. கேன்சர் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தாலும் இந்திய அணியில் நிரந்தரமாக இடம் கிடைக்காமல் இருந்து வந்தார்.

20/20 உலகக் கோப்பை போட்டியில் மிக மோசமாக விளையாடினர். மேலும் இவர் விளையாடிய அனைத்து ஐபிஎல் போட்டியிலும் மோசமாக விளையாடி உள்ளார். இதனால் யுவராஜ் சிங் ஐபிஎல் போட்டிகளில் புறக்கணிக்கப்பட்டார். மேலும் இந்திய அணியிலும் இவர் புறக்கணிக்கப்பட்டார். இந்திய அணி மட்டும் இல்லாமல் ரஞ்சி கிரிக்கெட் அணியிலும் அவருக்கு  வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தற்போது இந்திய அணியில் பாண்டியா, ராகுல் மற்றும்  தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் அவரது இடத்தை பிடிக்க வீரர்கள் போட்டி போட்டு நின்றதால் வாய்ப்பே இல்லாமல் போனது. இவர் ஐபிஎல் போட்டியில் வருடத்திற்கு ஒருமுறை அணி மாற வேண்டிய நிலை ஏற்பட்டது. இவர் சில மாதம் முன்புதான் யோ யோ டெஸ்டில் யுவராஜ் சிங் விளையாடினர். அதில் அவர் மிகவும் சிறப்பாக விளையாடி அவர் தனது திறமையை நிரூபித்தார். ஆனாலும் அவர் இந்திய அணிக்கு விளையாட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதன் பின் 2018 ஆண்டில் பேட்டி அளித்த யுவராஜ் சிங் தான் ஓய்வு பெரும் நாள் அப்போது பேசினார். அதில் எனக்கு வயது கூடிக்கொண்டே போகிறது. இனிமேல் எந்த மாதிரியான  கிரிக்கெட் போட்டியில் நான் விளையாடுவேன் என்றார். மேலும் நான் 2019க்கு பிறகு ஓய்வு பற்றி அறிவிப்பேன் என்றார். இதற்கு மேல் நான் விளையாடுவது சந்தேகம் தான் என்று கூறினார். இது குறித்து தற்போது ஓய்வை அறிவித்துள்ளார். ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்.

English Summary

indian cricketer's retirement official announcement


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal