ஆட்டத்தின் துவக்கத்திலேயே நியூசிலாந்து அணியை நடுங்கவைக்கும் இந்திய அணி!. ஸ்டெம்புகளை தெறிக்கவிட்ட ஷமி!. - Seithipunal
Seithipunal



ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை வென்று உற்சாகத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்நிலையில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் உள்ள மெக்லீன் மைதானத்தில் இன்று தொடங்கியது.

இந்த ஆட்டத்தின் இந்திய அணி வீரர்கள் : 

விராட்கோலி (கேப்டன்), டோனி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், , ரவீந்திர ஜடேஜா,  குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், முகமது சிராஜ், கலீல் அகமது, முகமது ஷமி, சுப்மான் கில், விஜய் சங்கர் ஆகியோர் உள்ளனர்.

இந்த ஆட்டத்தின் நியூசிலாந்து அணி வீரர்கள்: 

கனே வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் பவுல்ட், பிரேஸ்வெல், காலின் டி கிரான்ட்ஹோம், டாம் லாதம், பெர்குசன், மார்ட்டின் கப்தில், மாட் ஹென்றி, காலின் முன்ரோ, ரோஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், மிட்செல் சான்ட்னெர், சோதி, டிம் சவுதி ஆகியோர் உள்ளனர்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். நியூசிலாந்து அணியின் துவக்க மட்டையாளர்களான மார்டின் கப்தில், காலின் மன்ரோ களமிறங்கினர்.

சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, துவக்க மட்டையாளர்களை அடுத்தடுத்து போல்டாக்கி வீழ்த்தினார். தற்போது களத்தில் கனே வில்லியம்சன் மற்றும் ரோஸ் டெய்லர் திணறியபடி ஆடிக்கொண்டுள்ளனர். 

நியூசிலாந்து அணி தற்போது வரை 10 ஓவர்களுக்கு 34 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறியபடி ஆடிக்கொண்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian cricket team playing well


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->