ரசிகர்களுக்கு மகிழ்ச்சி! டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு! - Seithipunal
Seithipunal


இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது போட்டியானது இன்று பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்க இருக்கிறது. முதல் போட்டி இமாச்சல் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் நடக்க இருந்த நிலையில், மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது போட்டி மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

இந்த நிலையில் தொடரின் இறுதிப் போட்டியானது இன்று பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்க இருக்கிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியை பொறுத்தவரையில் கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியே மீண்டும் களம் இறங்கியுள்ளது.  தென்னாபிரிக்க அணியை பொறுத்தவரையில் கடந்த போட்டியில் விளையாடிய ஆண்ட்ரே நார்ட்ஜெ நீக்கப்பட்டு ஹென்றிக்ஸ் அழைக்கப்பட்டுள்ளார். 

இந்த போட்டி மழையால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போட்டி தொடங்கியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது. மேலும் இந்த ஆடுகளம் மிகவும் சிறிய ஆடுகளம் என்பதாலும், மேலும் பேட்டிங் பிட்ச் என்பதாலும் ரசிகர்களுக்கு விருந்து மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்திருக்கும்.

பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்தியாவிலேயே மிகச்சிறந்த மழைநீர் வடிகாலை வைத்துள்ளதால், மழை வந்தாலும் உடனடியாக ஆட்டத்தை தொடங்கிவிட முடியும் என்பதால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் அதிகளவில் மைதானத்தில் குவிந்துள்ளார்கள். இந்த ஆட்டத்தில் 20  ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தை பெறப்போவது யார் என்று போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது ரோஹித் ஷர்மாவை விட கேப்டன் கோலி ஏழு ரன்கள்  அதிகமாக இருக்கும் நிலையில் இந்த போட்டியில் யார் முதல் இடத்தைப் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

தென்னாப்பிரிக்கா (விளையாடும் லெவன்): ரீசா ஹென்ட்ரிக்ஸ், குயின்டன் டி கோக் , டெம்பா பவுமா, ரஸ்ஸி வான் டெர் டுசென், டேவிட் மில்லர், டுவைன் பிரிட்டோரியஸ், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, ஜோர்ன் ஃபோர்டுயின், காகிசோ ரபாடா, பியூரன் ஹென்ட்ரிக்ஸ், தப்ரைஸ் ஷம்ஸி

இந்தியா (விளையாடும் லெவன்): ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ரிஷாப் பந்த் , ஸ்ரேயாஸ் ஐயர், கிருனல் பாண்ட்யா, ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், நவ்தீப் சைனி


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india won the toss elected bat first in final T20 against southafrica


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->