நியூசிலாந்தை மிரள விட்ட இந்திய அணி அபார வெற்றி! மெகா சிக்சருடன் ஆட்டத்தை முடித்த ஸ்ரேயாஸ் அய்யர்!  - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இன்று ஆக்லாந்தில் தொடங்கிய முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே அடித்து ஆடிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்கள்குப்திலும், முன்றொவும் இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார்கள். எட்டாவது ஓவரில் தான் இந்திய அணிக்கு முதல் விக்கெட் கிடைத்தது. சிவம் துபே பந்தில் மார்ட்டின் குப்திலின் அசத்தலான ஒரு ஷாட்டினை சிக்ஸ் லைனில் நின்ற ரோகித் சர்மா துல்லியமாக கேட்ச் செய்ய இந்திய அணிக்கு முதல் விக்கெட் கிடைத்தது. 19 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சர்டன் 30 ரன்கள் எடுத்தார் குப்தில். அதற்குள் நியூசிலாந்து அணியானது 80 ரன்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதன்பின்னரும் நியூசிலாந்து அணியின் ரன் வேட்டையை தொடர்ந்து கொண்டே இருக்க, இந்திய அணி அடுத்தடுத்து பந்துவீச்சாளர்களை மாற்றி பார்த்தும் எவ்வித பலனும் அளிக்கவில்லை. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஷார்துல் தாக்குர் பந்து வீச்சினை நியூசிலாந்து வீரர்கள் சிக்சர்களாக பறக்கவிட்டு, அந்நாட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்கள். கோலின் மொன்றோ 42 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 59 ரன்கள் எடுத்து தாக்குர் பந்தில் சஹாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்து வந்த கிரந்தோமே இரண்டு பந்துகளில் ரவிந்திர ஜடேஜாவின் சூழலில் சிவம் தூபேவிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார். 

அதற்கடுத்து வந்த ரோஸ் டைலர் கேப்டன் வில்லியம்சன் உடன் இணைந்து இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார்கள். 4 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 26 பந்துகளில் 51 ரன்கள் குவிக்க சாஹலின் பந்துவீச்சில் கோலி இடும் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கேப்டன் வில்லியம்சன். அடுத்து வந்த சீபர்ட் பும்ரா பந்துவீச்சில் அய்யரிடம் கேட்ச் கொடுத்து ஒரு ரன்னில் ஆட்டம் இழக்க இறுதியில் மிட்செள் சண்ட்னர் 2  ரன்களுடன் களத்தில் நின்றார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற மூத்த வீரர் ரோஸ் டைலர் 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 27 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணியானது 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் தாக்குர், பும்ரா. சிவம் துபே, ஜடேஜா, சாஹல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள். 4 ஓவர்களை முழுமையாக வீசிய முகமது சமி 53 ரன்களை விட்டுக் கொடுத்தும் ஒரு விக்கெட்டையும் எடுக்க முடியவில்லை. இந்திய அணிக்கு 204 ரன்கள் என்ற சவாலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

204 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. சிக்சருடன் தொடங்கிய ரோஹித் சர்மா அதே ஓவரில் ஆட்டமிழந்து 7 ரன்களில் வெளியேறினார். அதற்கு அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுலுடன் சேர்ந்து நியூசிலாந்தை வெளுத்து வாங்கினார்கள். முதல் 10 ஓவர் முடிவில் 115 ரன்கள் எடுத்திருந்தபோது லோகேஷ் ராகுல் 27 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 56 ரன்கள் எடுத்திருந்தபோது சவுதி இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

அதற்கு அடுத்த ஓவரிலேயே கேப்டன் விராட் கோலியும் 32 பந்துகளில் 1 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 45 ரன்களை எடுத்து குப்திலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த துபே ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் என அதிரடியாக தொடங்கிய நிலையில் 9 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணிக்கு நெருக்கடி உண்டானது. இறுதிவரை களத்தில் நின்ற ஸ்ரேயாஸ் அய்யர் மணிஷ் பாண்டே இருவரும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை தொடர்ந்து அடித்து விளையாட, இந்திய அணி 19 ஓவரில் எளிதாக வெற்றி பெற்றது.

5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியின் வெற்றிக்கு லோகேஷ் ராகுல் விராட் கோலி அதிரடி ஆட்டம்  பெரும்பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. இறுதிவரை களத்தில் நின்ற அய்யர் 29 பந்துகளில் 58 ரன்கள் 5 பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் எடுத்து மெகா சிக்சருடன் ஆட்டத்தினை நிறைவு செய்தார்.  நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சான்டனர், டிகினர் தலா ஒரு விக்கெட்டையும் சோதி 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india won the match against new zealand by 6 wickets


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->