இந்தியா அபார வெற்றி! ப்ரித்வி ஷா, இஷான் கிஷன், தவான் அட்டகாசமான ஆட்டம்!  - Seithipunal
Seithipunal


இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணியுடன் விளையாடுகிறது. இன்று கொழும்புவில் தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்களை இழந்து 262 ரன்களை அடித்தது. 263 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

இரண்டாம் கட்ட வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணியில், சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் அறிமுகமானார்கள். டாஸ் வென்ற இலங்கை அணிக்கு அஷ்விகா பெர்னாண்டோ, மினோத் பனுகா இணையானது சுமாரான தொடக்கத்தை அளித்தது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார், தீபக் சாஹர் ஆகியோர் தொடக்கத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போக, இந்திய அணியின் புதிய கேப்டனான ஷிகர் தவான், சுழற்பந்துவீச்சாளரான சாஹலை அழைக்க, தனது முதல் பந்திலேயே அஷ்விகா பெர்னாண்டோவை வெளியேற்றினார். அவர் அடித்த பந்தை மணிஷ் பாண்டே சிறப்பாக கேட்ச் செய்து அவரை வெளியேற்றினார். அவிஷ்கா பெர்னாண்டோ 35 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 32 ரன்களை அடித்திருந்தார். 

அடுத்ததாக சாஹலின் இணையான குல்தீப் யாதவ் பந்து வீச வந்தார். இவர்கள் இருவரும் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு பிறகு தற்போது இணைந்து விளையாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே ஓவரில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த பனுக்கா ராஜபக்சே மற்றும் மினோத் பனுக்கா இருவரையும் குல்திப் யாதவ் வெளியேற்றினார். மினோத் பணக்கா 44 பந்துகளில் 27 ரன்கள் எடுக்க, ராஜபக்ச 22 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 24 ரன்களை எடுத்திருந்தார். அதன் பிறகு வந்த தனஞ்சய டி சில்வா 27 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்தபோது க்ருனால் பாண்டியாவின்  பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

பின்னர் சாரித் அசலங்கா, கேப்டன் ஷனாகா இணை இலங்கை அணியை மீட்டது. அசலங்கா  65 பந்துகளில் 38 ரன்களும் கேப்டன் ஷனாகா 50 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மிடில் ஓவர்களை வீச வந்த  தீபக் சாஹர், அசலங்கா, ஹசரங்கா ஆகிய இருவரையும்  வெளியே அனுப்பி அணிக்கு உதவினார். இசுரு உதானவை ஹார்திக் பாண்டியா தன்பங்குக்கு வெளியேற்ற, இறுதி நேரத்தில் களமிறங்கிய சமித் கருணாரத்னே மற்றும் சமீரா இருவரும் இந்திய பந்து வீச்சை நொறுக்கி தள்ளினார்கள். அதுவும் இறுதி ஓவரில் புவனேஷ்வர் குமாரின் ஓவரில் சிக்ஸர்களை பறக்க விட அந்த அணி சவாலான இலக்கை நோக்கி நகர்ந்தது. இறுதி பந்தில் சமீரா ரன் அவுட் ஆக, இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்களை குவித்துள்ளது. 

இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியா மற்றும் புவனேஸ்வர் குமார் ஓவர்களில் அதிகளவு ரன்கள் விட்டுக் கொடுக்க பட்டது. அதே சமயம் மிகவும் கஞ்சத்தனமாக பந்து வீசிய க்ருனால் பாண்டியா 10 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு மெய்டனுடன் ஒரு விக்கெட்டையும் எடுத்தார். தீபக் சாஹர், சாகல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

263 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷா அபாரமான தொடக்கத்தினை அளித்தார். அவர் வரிசையாக பவுண்டரிகளை விளாச, இந்திய அணி 20 ஓவர் போட்டியில் விளையாடுவது போல ரன் எண்ணிக்கையை உயர்திக் கொண்டிருந்தது. 24 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்திருந்தபோது சிக்சருக்கு  ஆசைப்பட்டு எல்லைக் கோட்டின் அருகே கேட்ச் ஆகி வெளியேறினார். 

அதற்கடுத்து வந்த அறிமுக வீரர் இஷான் கிஷன்  தனது முதல் பந்திலேயே சிக்சர், இரண்டு பந்திலேயே பவுண்டரி விளாசி மைதானத்தை அமர்க்களப்படுத்தினார். தொடர்ச்சியாக அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் தனது முதல் போட்டியிலேயே அரை சதம் அடித்து அசத்தினார் அவர் 59 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய தவான் அரைசதம் அடித்து இறுதிவரை களத்தில் நின்றார். அவர் 95 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 86 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் மற்றொரு அறிமுக வீரர் சூரியகுமார் யாதவ் 20 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்களை அடித்தார். இடையே வந்த மனிஷ் பாண்டே 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இந்திய அணி 36.3 ஓவர்களிலேயே 263 ரன்களை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India won the 1st ODI match against srilanka by 7 Wkts


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->