காமன்வெல்த் போட்டி : ஆசியை அலறவிட்ட இந்தியா, அபார ஆட்டம்! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கியது. காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பெண்கள் கிரிக்கெட் போட்டி இடம் பெற்றுள்ளது.

பெண்கள் கிரிக்கெட் போட்டியின் முதல் லீக் போட்டியில், இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மான்ப்ரீத் கவுர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தார். அவர் தேர்ந்தெடுத்ததை சரியாக்கும் விதமாக தொடக்க வீராங்கனைகள் மந்தனா, ஷபாலி இருவரும் அதிரடியாக விளையாடி பௌண்டரிகளாக விலகினார்கள். 

மந்தனா 24 (5 பௌண்டரிகள்) ரன்களிலும், ஷபாலி வெர்மா 48 (9 பௌண்டரிகள்) ரன்களிலும் ஆட்டம் இழக்க, அதற்கு அடுத்து வந்த வீராங்கனைகள் யஸ்டிக்கா பாட்டியா 8 ரன்களிலும், ஜெமிமா 11 ரன்களிலும், தீப்தி சர்மா ஒரு ரன்னிலும், ஹர்லின்  தியோல் 7 ரன்களிலும் ஆட்டம் இழக்க தனி ஒரு ஆளாக நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஹர்மான்ப்ரீத் கவுர் 52 (8 பௌண்டரிகள், 1 சிக்ஸர்) ரன்களை சேர்த்தார். 

நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்கள் முடிவில் இந்திய அணியானது எட்டு விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்திருக்கிறது. ஆசி அணி தரப்பில் ஜோன்ஸேன் 4 விக்கெட்டுகளை வாரினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india women scored 154 against aus in cwg2022


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->