நியூசிலாந்து உடனான போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்தியா.! - Seithipunal
Seithipunal


இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரின் இரண்டாவது போட்டி ஆனது இன்று நியூசிலாந்தின் ஆக்லாந்து கிரீன் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன்  முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர்.

முதலில் பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு கடந்தபோட்டி போலவே இந்தப் போட்டியிலும் மார்டின் குப்டில் காலின் முன்றோ ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. இருப்பினும் கடந்த போட்டி போல அதிரடியாக விளையாட முடியாமல் ரன் குவிக்க தடுமாறினார்கள். நியூசிலாந்து அணியில் அதிக பட்சமாக கப்தில் 33, சைபர்ட் 33, மன்ரோ 26, ராஸ் டெய்லர் 18 ரன்கள் சேர்த்தனர். 

பந்து வீச்சைப் பொறுத்தவரையில் இந்திய அணியின் வீரர்கள் அனைவருமே மிக சிறப்பாக பந்து வீசினார்கள். ஜஸ்பிரித் பும்ரா, தாக்கூர் , சிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இதில் சுழற்பந்துவீச்சாளர் சாஹல் தவிர்த்து மற்ற அனைவரும்  மிக சிறப்பாக பந்துவீசினார்கள்.

ஷமி விக்கெட் எதுவும் எடுக்கவில்லை என்றாலும் 4 ஓவர்களை வீசி ௨22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதேபோல ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களை வீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ரவீந்திர ஜடேஜாவும் 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணிக்கு 133 என்ற எளிமையான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 17.3 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ராகுல் 57, ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன்கள் எடுத்தனர். ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india win second t20 match


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->