நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.!! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3-டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 போட்டிகளில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்று, நியூசிலாந்து அணியை இந்தியா அணி வீழ்த்தியது. 

இதையடுத்து, நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முதல் டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அணி போராடி டிரா செய்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கியது. கடந்த 3ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 325 ரன்களை குவித்தது. 

இதையடுத்து,  விளையாடிய நியூசிலாந்து அணி 62 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதன் பிறகு இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 276 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து, நான்காவது நாள் தொடக்கத்தில் 167 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. இதன் மூலம் இந்திய அணி  372 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. மேலும், நியூசிலாந்து தொடரை முழுமையாக கைப்பற்றியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india win 2nd test match


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->