முதல் போட்டியில் ஸ்பெயின் உடன் மோத போகும் இந்தியா! ஜனவரியில் தொடங்கும் உலக கோப்பை! - Seithipunal
Seithipunal


ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் ஒடிசாவில் ஜனவரி மாதம் தொடங்குகிறது!

2023 ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக கோப்பை ஹாக்கி தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்கிறது. இந்த அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மொத்தம் 44 போட்டிகள் நடைபெறுகிறது. நான்கு பிரிவிலும் முதல் இடம் பெரும் நான்கு அணிகள் நேரடியாக கால் இறுதிக்கு தகுதி பெறும். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெறும் அணிகள் கிராஸ் மேட்சிங் முறையில் நான்கு அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும். கடந்த 2018 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி கால் இறுதியில் நெதர்லாந்து அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது.

இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஸ்பெயினை எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது ஒரிசாவின் புவனேஸ்வர் ரூர்கேலாவில் நடைபெறுகிறது. 

உலக தர வரிசையில் ஸ்பெயின் அணி 8வது இடத்திலும் இந்திய அணி 5வது இடத்திலும் உள்ளன. இந்த இரு அணிகளும் குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ளன. இந்தியா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதும் போட்டி ஜனவரி 13ம் தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இந்திய அணி 15 ஆம் தேதி இங்கிலாந்துடன் மோதுகிறது.

இங்கிலாந்து அணி உலகத் தரவரிசையில் 6ம் இடத்தில் உள்ளது. நடைபெற்று முடிந்த காமன்வெல்த் போட்டியில் இங்கிலாந்து அணியும் இந்திய அணியும் மோதிய ஆட்டம் பரபரப்பான சூழ்நிலையில் 4-4 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

பின்னர் 19ஆம் தேதி புவனேஸ்வரி உள்ள கலிங்கா மைதானத்தில் வேல்ஸ் அணியுடன் இந்தியா பல பரிட்சை நடத்துகிறது.

இந்திய அணி 1975ல் உலகக் கோப்பையை வென்றது. அதன்பின் உலக கோப்பையை இந்தியா வெல்லவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெறவில்லை உலகக் கோப்பை ஹாக்கி தொடரானது இந்தியாவில் இது நான்காவது முறையாக நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India will face Spain in the first match World Cup starting in January


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->