தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பட்டியல் வெளியீடு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி, இதுவரை முடிவடைந்துள்ள 4 டி-20 போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி யும், அடுத்த இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில், இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டி-20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளதால், இத்தொடரைக் கைப்பற்றி கோப்பையை வெல்லும் முனைப்பில் இரு அணியினருமே தீவிரம் காட்டி வருகின்றனர்.

எனவே, இப்போட்டியில் வெற்றி பெற்று டி-20 கோப்பையை கைப்பற்றப்பவது யார்? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் கோப்பையை கைப்பற்ற இரு அணிகளுமே வரிந்து கட்டுவதால் இன்றைய போட்டியை விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் வீரர்கள்

 இந்தியா வீரர்கள் : ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர்,ரிஷப் பந்த்(கே & வி.கீ), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான்.

தென்னாப்பிரிக்கா வீரர்கள் : டெம்பா பாவுமா (கே), குயின்டன் டி காக் (வி.கீ), டுவைன் பிரிட்டோரியஸ், ராஸ்ஸி வான் டெர் டுசென், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், அன்ரிச் நார்ட்ஜே, லுங்கி என்கிடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India vs South Africa possible 11 players


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->