INDvsSA : ஆறுதல் வெற்றியாவது பெறுமா இந்தியா.? இன்று 3வது ஒருநாள் போட்டி.! - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்கா இந்தியா அணி மோதும் 3வது ஒருநாள் போட்டி இன்று மதியம் 2 மணிக்கு ஆரம்பமாகிறது

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா வென்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்தியா, தென்ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், தென் ஆப்பிரிக்க அணி முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

இதில், இன்று நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டி கேப்டவுன் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு ஆரம்பமாகிறது. இதில், இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றியும், 2-ல் தோல்வியும் பெற்றுள்ளது. மேலும், தென்ஆப்பிரிக்கா அணி இந்த மைதானத்தில் 37 போட்டிகளில் விளையாடி, 31 வெற்றிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India vs South Africa 3rd one day


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->