அயர்லாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் உத்தேச பட்டியல் வெளியீடு.!!
india vs iraland t20 match team india
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. இதனிடையே அயர்லாந்து அணிக்கு எதிராக 2 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்திக் பாண்ட்யா தலைமையில் உருவாக்கப்பட்ட இரண்டாம்தர இந்திய அணி 2 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக மும்பையில் இருந்து அயர்லாந்துக்கு புறப்பட்டு சென்றது. இந்தியா - அயர்லாந்து எதிரான 20 ஓவர் டி20 போட்டி நாளையும், 28ஆம் தேதி நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. அயர்லாந்து தொடரில் சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் களம் இறங்குகின்றனர். இந்த தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் செயல்படுகிறார்.
இந்திய அணியின் உத்தேச பட்டியல் :
இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா (கேப்டன்), யுஸ்வேந்திர சஹால், புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.
English Summary
india vs iraland t20 match team india