இந்தியா பேட்டிங்! ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அணியில் மாற்றம்!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி,இரண்டு 20 ஓவர் போட்டிகளில் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.  கடந்த 24ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் கடைசி பந்தில் ஆஸ்திரேலிய அணி திரில் வெற்றி பெற்று தொடரில் 1 க்கு ௦ என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

20 ஓவர் போட்டி தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி போட்டி என்று பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி கட்டாயமாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த போட்டியில் தோல்வியடைந்தால் தொடரை இழந்துவிடுவோம் என்ற நெருக்கடியில் இந்திய அணி களம் இறங்கியுள்ளது. 

அதன்படி டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தப் போட்டியிலும் பந்துவீச்சை முதலில் தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் களமிறங்குகிறது. இந்திய அணியில் கடந்த போட்டியில் சொதப்பிய துவக்க வீரர் ரோகித் சர்மா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் ஒய்வு  அளிக்கப்பட்ட ஷிகர் தவான் இந்த போட்டியில் கலந்துகொள்ள, அதேபோல்  ஆல்ரவுண்டர் விஜயசங்கர் இடம்பெற மார்கண்டே நீக்கப்ட்டுள்ளார். கடந்த போட்டியில் தோல்விக்கு காரணமாக இருந்த உமேஷ் யாதவ் நீக்கபட்டு, சித்தார்த் கவுல் சேர்க்கபட்டுள்ளார். ஆஸ்ட்ரேலியா அணியில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அதே அணி களமிறங்குகிறது. 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india vs australia 2nd T20I in bangalore


கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
Seithipunal