உலக தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடம்!. வீரமங்கைக்கு குவிந்துவரும் பாராட்டுகள்!. - Seithipunal
Seithipunal



சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு வெளியிட்டுள்ள உலக குத்துச்சண்டை போடடிக்கான தர வரிசை பட்டியலில் இந்தியாவின் மேரி கோம்முதலிடத்தில் உள்ளார். உக்ரைன் வீராங்கனை ஓகோட்டா 2- வது இடம் பிடித்துள்ளார்.  

இந்தியாவின் பிரபல குத்து சண்டை வீராங்கனை மேரி கோம், கடந்த 2010ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக வெள்ளிப்பதக்கம் வென்றார். இதையடுத்து நடந்த 5 சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் தங்கம் வென்றார்.  

கடந்தாண்டு டெல்லியில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியின் போது உக்ரைன் நாட்டு வீராங்கனை ஹன்னா ஒக்கோட்டாவை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி 6ஆவது முறையாக தங்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். 

        

கடந்தாண்டு நடந்த காமன்வெல்த் போட்டி மற்றும் போலந்து நாட்டில் நடந்த சைலேசியன் ஓபன் குத்துச் சண்டை போட்டிகளில் தங்கப்பதக்கமும், பல்கேரியாவில் நடந்த ஸ்டிராண்ட்ஜா நினைவு குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கமும், 2012ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். 

இந்த நிலையில், சர்வதேச குத்து சண்டை கூட்டமைப்பு உலக தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் உலக குத்து சண்டை போட்டிக்கான தரவரிசை பட்டியலில், 1,700 புள்ளிகள் பெற்று இந்தியாவின் மேரி கோம் முதல் இடத்தினை பிடித்துள்ளார். 1,100 புள்ளிகளுடன் ஒகோட்டா 2வது இடம் பிடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India topped the list of world ranking


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->