இமாலய இலக்கை துரத்த சென்ற இந்திய பேட்மேன்களை துரத்தியடித்த ஆஸ்திரேலியா! அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்!  - Seithipunal
Seithipunal


இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் இன்று சிட்னியில் தொடங்கியது. முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு 289 ரன்கள் என்ற இமாலய இலக்கினை நிர்ணயித்துள்ளது. 

ஆஸ்திரேலியா அணி தரப்பில் கேப்டன் ஆரோன் பிஞ்ச், கேரே ஆட்டத்தைத் தொடங்கினார். ஆரோன் பிஞ்ச் 6 ரன்கள் சேர்த்த நிலையில், புவனேஷ்குமார் ஓவரில் கிளீன் போல்டாகி அவுட்டானார். குல்திப்பீன் முதல் ஓவரிலேயே கேரே 24 ரன்களில் ஆட்டமிழந்தார். 

பின்னர் வந்த மார்ஷ் கவாஜாவுடன் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு சிறப்பாக ஆடினார்கள். சிறப்பாக விளையாடிய  கவாஜா 70 பந்துகளில் அரைசதம் அடித்தார். ரவிந்திட ஜடேஜா வீசிய 29-வது ஓவரில் கவாஜா எல்பிடபிள்யு ஆகி ஆட்டமிழந்தார். கவாஜா  81 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்தார். 

அடுத்து வந்த ஹேண்ட்ஸ்கம்ப், மார்ஷுடன் சேர்ந்தார். ஹேண்ட்ஸ்கம்ப் களமிறங்கியது முதலே அதிரடியாக அடித்து ஆடினார்.  மறுபுறம் நிதானமாக பேட் செய்த ஷான் மார்ஷ் 65 பந்துகளில் அரைசதம் அடித்த பின் குல்தீப் யாதவ் வீசிய 39-வது ஓவரில் ஷமியிடம் கேட்ச் கொடுத்து மார்ஷ் 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த ஆல்ரவுண்டர் ஸ்டோனிஸ், ஹேண்ட்ஸ்கம்புடன் இணைந்தார். இருவரும் கடைசி 7 ஓவர்களில் இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்கள். இருவரையும் கட்டுபடுத்த முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினார்கள். 
புவனேஷ் குமார் வீசிய 48-வது ஓவரில் ஹேண்ட்ஸ்கம்ப் 73 ரன்களில் தவானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

இறுதி வரை அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலியா வீரர்கள் 50 ஓவர்கள் முடிவில்  5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் சேர்த்தனர். ஸ்டோனிஸ் 47 ரன்களிலும், மேக்ஸ்வெல் 11 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியத் தரப்பில் புவனேஷ்குமார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஜடேஜா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

289 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்து உள்ளது. முதல் ஓவரிலேயே பெஹரன்டார்ப் பந்துவீச்சில் தவான் எல்பிடபிள்யு முறையில் கோல்டன் டக் அவுட்டில் வெளியேறினார். அடுத்து வந்த இந்திய கேப்டன் கோலி 3 ரன்கள் சேர்த்த நிலையில், ரிச்சர்ட்ஸன் பந்துவீச்சில் ஸ்டோய்னிஸிடம் கேட்ச் கொடுத்து அதிர்ச்சி அளித்து ஆட்டமிழந்தார். 

அடுத்து களமிறங்கிய அம்பதி ராயுடு அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்த்தால் தனது விக்கெட்டை காவு கொடுத்து வெளியேறினார். அதே ஓவரில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து டக்அவுட்டில் பெவிலியன் திரும்பினார். 4 ஓவரில் 4 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ரோஹித் சர்மா, தோனி களத்தில் உள்ளனர்.

English Summary

India shocking start against Australia 1st odi


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal