சொதப்பிய இந்திய மிடில் ஆர்டர்...! கோலி எடுத்த தவறான முடிவு! 180 ரன்கள் இலக்கு!  - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 179  ரன்கள் குவித்துள்ளது. சரியான தொடக்கம் கிடைத்தும் சவாலான இலக்கை நிர்ணயிக்க முடியாமல் இந்திய அணி சொதப்பலாக விளையாடியது. 

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டி20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலையில் உள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது டி20 போட்டி ஹாமில்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் களமிறங்கினர். முதல் 2 போட்டிகளில் சொதப்பிய ரோஹித் சர்மா இன்றையப் போட்டியில் நிதானமாக தொடங்கி போக போக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி 89 ரன்கள் சேர்த்திருந்த போது கே.எல்.ராகுல் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடி ரோஹித் அரைசதம் கடந்து 65 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹாமிஷ்  பென்னட் வீசிய 6 ஆவது ஓவரில் மூன்று சிக்ஸர்களையும் 2 பவுண்டரிகளையும் விளாச 23 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார் ரோஹித் சர்மா.

இந்திய அணியில் வழக்கமாக 3வது வீரராக களமிறங்கும் விராட் கோலி, இந்த முறை சிவம் துபேவை களமிறக்கினார். ஆனால் இந்த முடிவு ஆட்டத்தினை மாற்றியமைத்தது. அதிரடியாக விளையாடி ரன் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் துபே 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 17 ரன்களிலும் கேப்டன் விராட் கோலி 38 ரன்களிலும் அடுத்தடுத்து  அவுட்டாகினர்.

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு179 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி சார்பில் ஹமிஷ் பென்னட் 3 விக்கெட்களை வீழ்த்தினார். தொடக்க ஜோடி கொடுத்த சிறப்பான ஆட்டத்தினை இந்திய அணி தக்கவைக்க தவறியதால் குறைவான இலக்கை நிர்ணயித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India set target 180 to new Zealand in Hamilton


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->