4 போட்டிகள் மட்டுமே அனுபவம் கொண்ட இந்திய பவுலிங் படை! சாதிக்குமா?! சறுக்குமா?!  - Seithipunal
Seithipunal


இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியானது இன்று பிரிஸ்பேனில் தொடங்கியது. இந்த போட்டிக்காக சிட்னியிலிருந்து இந்திய அணி  சென்றபோது பெரும்பாலான வீரர்கள் காயத்துடன் சென்றதால் ஆடும் லெவனை தேர்வு செய்வதில் மிகப் பெரிய சிரமம் ஏற்பட்டது. 

கடந்த போட்டியில் விளையாடிய ரவீந்திர ஜடேஜா ரவிச்சந்திரன் அஸ்வின், ஹனுமா விஹாரி, ஜஸ்பிரிட் பும்ரா  இந்த போட்டியில் விளையாடவில்லை. அவர்களுக்கு மயங்க் அகர்வால் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன், தாக்கூர் ஆகிய 4 பேரும் அணியில் இணைந்துள்ளனர். தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் இருவருமே தமிழக வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்றைய போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு அனுபவம் என்பது மொத்தமே நான்கு போட்டிகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்ககளாக இடம் பெற்றிருக்கும் முகம்மது சிராஜ் நவ்தீப் சைனி ஷார்துல் தாகூர், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய நான்கு பேர் இந்த தொடரில் தான் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக சஷார்துல் தாகூர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக களமிறங்கி, இருந்தாலும் அந்த போட்டியில் 10 பந்துகளை மட்டுமே வீசிய அவர் காயம் காரணமாக வெளியேறிவிட்டார். புதிய கூட்டணியுடன் இந்திய அணியானது ஆஸ்திரேலியவை சந்திக்க களமிறங்கி உள்ளது. இதில் 5 வீரர்களில் அதிக பட்சமாக முகமது சிராஜ் 3-வது டெஸ்ட் போட்டியை விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரே இந்தப் படைக்கு தலைமையேற்ற செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக ஆரம்பத்திலேயே  ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் விக்கெட்டை வீழ்த்தி அனைவரையும் உற்சாகப்படுத்தினார். 

இந்த தொடரின் 2வது போட்டியில் சிராஜ், மூன்றாவது போட்டியில் நவதீப் சைனி ,இன்றைய போட்டியில் நடராஜனும் வாஷிங்டன் அறிமுக வீரர்களாக களம் இறங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India played with 5 bowlers just 4 Test experiences


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->