தென்னாப்பிரிக்கவை துவம்சம் செய்த கோலி, ஜடேஜா! இந்தியா 600 ரன்களை கடந்தது!  - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்களை குவித்து இருந்தது.

ரோகித் சர்மா 14 ரன்கள், மயங்க் அகர்வால 108 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். புஜாரா 58 ரன்களில் ஆட்டமிழந்தார், அதனையடுத்து களமிறங்கிய கோலி, ரஹானே இருவரும் நிதானமாகவும், அதே சமயம் நேர்த்தியாகவும் விளையாடினார்கள். முதல் நாள் ஆட்ட நேரமுடிவில் இந்திய அணி 273 ரன்களை எடுத்து இருந்தது.

இன்றைய ஆட்டத்தினை கோலி 63 ரன்களுடனும், ரஹானே 18 ரன்களுடனும் தொடங்கினார்கள். நேற்று எப்படி நேர்த்தியாக முடித்தார்களோ அவ்வாறே இன்று ஆட்டத்தினை தொடங்கினார்கள். கோலி 26 ஆவது சதத்தினையும், ரஹானே அரைசதத்தினையும் அடித்தனர். ரஹானே 59 ரன்களை எடுத்திருக்கும் போது ஆட்டமிழந்தார். 

அடுத்து வந்த ஜடேஜா நிதானமாக விளையாட கோலி பவுண்டரிகளை விளாசி இரட்டை சதத்தினை நோக்கி நகர்ந்தார். தேநீர் இடைவேளைக்கு முன் இந்திய அணி 473 ரன்களை எடுத்திருந்தது. கோலி 194 ரன்களுடனும், ஜடேஜா 25 ரன்களுடனும் சென்றனர். 

அதன்பிறகு வந்த ஜடேஜா தென்னாபிரிக்க பந்துவீச்சை சிதறடித்தார். ஓவருக்கு 10 ரன்கள் வீதம் எடுக்க இந்திய அணி 600 ரன்களை நோக்கி வேகமாக பயணிக்க ஆரம்பித்தது. இந்திய அணி தற்போது 600 ரன்களை கடந்த நிலையில், ஜடேஜா 91 ரன்களுடனும் கோலி 253 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india got quick runs over south africa in pune test


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->