உலககோப்பை போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்!! சோகத்தில் ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே நடந்த போட்டியின் போது நடுவர் அலீம் தாரிடம் ஆக்ரோஷமான முறையில் விக்கெட் கேட்டு முன்னேறியதற்காக இந்தியா கேப்டன் விராட் கோலிக்கு அவரது ஆட்டக் கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவரது பெயரில் ஒரு குற்ற புள்ளியும் சேர்க்கப்பட்டது.  

கோலியை போலவே  வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியின் போது நியூசிலாந்து அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்கள் வீசி முடிக்கவில்லை என நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சனும் தடைக்கு உள்ளாவது உறுதி.20 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இன்னொரு போட்டியில் அபராதம் விதிக்கப்பட்டால் கேன் வில்லியம்சனும் தடைக்கு உள்ளாவது உறுதி. 

இனி வரும் போட்டிகளில் கோலியும், கேன் வில்லியம்சனும்  இதே போன்ற செயலில் ஈடுபட்டு நான்கு புள்ளிகளுக்கு மேல் பெற்றால் இருவருக்கும் ஒரு டெஸ்ட்  போட்டி அல்லது இரண்டு ஒருநாள் போட்டி அல்லது இரண்டு டி20 போட்டி இதில் எந்த போட்டி முன்னதாக வருகிறதோ? அதில் விளையாட தடைவிதிக்கப்படும்.

இப்படி நடந்தால் இரண்டு அணிகளும் பேராபத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒருவேளை விராட் கோலி தடைபெற்றால், அதை இந்திய அணியால் ஜீரணிக்க முடியாது. அதேபோல் கேன் வில்லியம்சன் தடைபெற்றால், நியூசிலாந்தால் அதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india and newsland team in problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->