வெறித்தனத்துடன் விளையாடிய ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த்..!! கொண்டாட்டத்தில் இந்திய ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்திய நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டியின் முதலாவது ஆட்டம் சென்னையிலிருக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் பகல் - இரவு நேரமாக நடைபெற்று வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு உள்ளனர். 

ind vs wi. ind vs wi images,

இன்று நடைபெறும் ஆட்டத்தில் ரோகித் சர்மா., லோகேஷ் ராகுல்., விராட் கோலி (கேப்டன்)., ஸ்ரேயாஸ் அய்யர்., கேதர் ஜாதவ்., ரிஷப் பண்ட்., ரவீந்திர ஜடேஜா., சர்துல் தாகுர்., தீபக் சாஹர்., குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் விளையாடி வருகின்றனர். இதனைப்போன்று வெஸ்டிண்டீஸ் அணியின் சார்பாக ஷாய் ஹோப்., லீவிஸ்., ஹெட்மயர்., நிகோலஸ் பூரன்., ரோஸ்டன் சேஸ்., கீரன் பொல்லார்ட் (கேப்டன்)., ஜாசன் ஹோல்டர்., கீமோ பால்., அல்ஜாரி ஜோசப்., ஷெல்டன் காட்ரெல் மற்றும் கரி பியர் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

முதலில் களமிறங்கிய இந்திய அணியின் சார்பாக துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கிய நிலையில் இருவரும் தங்களின் நிதானம் மற்றும் அதிரடி ஆட்டத்தின் மூலமாக ரன்களை சரமாரியாக குவித்து தள்ளினார். மேலும்., இருவரும் சதமடித்து இந்திய அணிக்கு பெருமையை சேர்த்தனர். இறுதியாக கே.எல்.ராகுல் 104 பந்துகளில் 102 ரன்கள் எடுத்திருந்த நிலையில்., மொத்தமாக 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடித்து விளாசினார். 

ind vs wi. ind vs wi images,

இதற்கு அடுத்தபடியாக களமிறங்கிய விராட் கோலி முதல் பந்திலேயே அவுட்டான நிலையில்., ஷ்ரேயஸ் ஐயர் களத்தில் இறங்கி ரோஹித் ஷர்மாவுடன் ஆட துவங்கினார். இறுதியில் ரோஹித் சர்மா 138 பந்துகளில் 159 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் அவுட் ஆனார். இவர் மொத்தமாக 17 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடித்து விளாசியிருந்தார். இறுதி நேரத்தில்., ஷ்ரேயஸ் ஐயர் - ரிசப் பந்த் கூட்டணி நல்ல நிலையில் விளையாடி வந்தனர். மேலும்., ரிஷப் பந்த் அதிரடியாக இறுதி நேரத்தில் விளையாடி ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாகினர். 

அதிரடியாக விளையாடி வந்த ரிஷப் பந்த் இறுதி நேரத்தில் சிக்ஸர் அடிக்கும் ஆவலில் விளாசிய நிலையில்., 16 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து கேட்ச் அவுட் ஆனார். இதனையடுத்து ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் 48 ஆவது ஓவரின் முடிவில் 29 பந்துகளில் 51 ரன்கள் எடுத்திருந்தார். கேதர் ஜாதாவும் - ஷ்ரேயஸ் ஐயரும் 48 ஆவது ஓவரின் துவக்கத்தில் ஜோடி சேர்த்து பந்துகளை எதிர்கொண்டனர். 48 ஆவது ஓவரின் முடிவில் ஷ்ரேயஸ் ஐயர் 32 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து கேட்ச் அவுட்டானர்.

ind ws wi,

49 ஆவது ஓவரின் துவக்கத்தில் கேஹர் ஜாதாவும் - ரவீந்திர ஜடேஜாவும் களமிறங்கினர். கேதர் ஜாதவ் 10 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில்., இன்றைய ஆட்டத்தில் இறுதியாக இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் எடுத்துள்ளது. 388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியானது களத்தில் இறங்கியுள்ளது. இன்று நடைபெறும் போட்டியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. மேலும்., முதல் போட்டியில் தோல்வியை தழுவினாலும்., இப்போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய வீரர்கள் வெறித்தனமாக ஆடி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs wi match india super bating scores high fans happy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->