#Breaking : INDvsSL நிறுத்தப்பட்ட ஆட்டம் சற்றுமுன் தொடங்கியது.! 50 ஓவர் இல்லை.! மேலும் சில விதிகள்., முழு விவரம்.!
ind vs sl match after rain delay
இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான இன்றைய முன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் ஐந்து புதிய இளம் வீரர்களை களமிறங்கியுள்ள இந்திய அணி, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்திய அணியின் தொடக்க வீரர் பிரிதிவ் ஷா 49 ரன்கள் எடுத்த போது சனகா வீசிய பந்தில் எல்பிடபல்யூ கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். ஷிகர் தவான் 13 ரன்கள் எடுத்த போது சமீரா பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.
இதனையடுத்து, இன்று சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியுள்ள அதிரடி மன்னன் சஞ்சு சாம்சன், 46 பந்துகளில் 46 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடங்கும்.
இந்நிலையில், ஆட்டத்தின் 23 ஓவர்கள் முடிந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அப்போது, இந்திய அணி 23 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் சூரியகுமார் 22 ரன்களுடனும், மனிஷ் பாண்டே 10 ரன்களுடனும் இருந்தனர்.
சுமார் 4.53 மன்னிக்கு நிருபட்ட ஆட்டம், இறுதியாக 6.28 மணிக்கு மீன்றும் தொடங்கியது. மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டதால், 50 வர்களுக்கு பதிலாக 47 ஓவர்கள் மட்டுமே என்றும், ஆட்டத்தில் மூன்று பந்து வீச்சாளர்கள் 9 ஓவர்கள் வீசவும், 2 பந்து வீச்சாளர்கள் முழுமையாக 10 ஓவர்கள் வீசவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மழைக்கு பின்னர் தொடங்கிய ஆட்டத்தின் தற்போதைய நிலவரப்படி, இந்திய அணி 27.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் சூரியகுமார் 34 ரன்களுடனும், ஹார்த்விக் பாண்டியா 18 ரன்களுடனும் இருந்தனர். மனிஷ் பாண்டே 11 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
English Summary
ind vs sl match after rain delay