இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி.. இந்திய அணி பேட்டிங்.. அணியில் மாற்றம்.! - Seithipunal
Seithipunal


இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, கோலி, ராகுல் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஹார்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி விளையாடியது.

இதில், முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

இதனையடுத்து இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியில் கடந்த போட்டியில் விளையாடிய உம்ரான் மாலிக் மற்றும் ஹார்திக் பாண்டியா  ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு சூரிய குமார் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் விளையாடுகின்றனர்.

அணி விவரம்

இலங்கை அணி 11 வீரர்கள் : 

அவிஷ்க பெர்னாண்டோ, நுவனிடு பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ்(டபிள்யூ), அஷேன் பண்டார, சரித் அசலங்கா, தசுன் ஷனக(கேட்ச்), வனிந்து ஹசரங்க, ஜெஃப்ரி வான்டர்சே, சாமிக்க கருணாரத்னே, கசுன் ராஜித, லஹிரு குமார.

 இந்தியா அணி 11 வீரர்கள் : 

ரோஹித் சர்மா (கேட்ச்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வ), சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs SL 3rd ODI india won the toss choose to bat


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->