IND Vs SL: அடுத்தடுத்து 4 விக்கெட்டை பறிகொடுத்த இலங்கை.. சீறும் பந்தால் பதறல்.!! - Seithipunal
Seithipunal


ஸ்ரீலங்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் களமிறங்கியுள்ளது. முதல் போட்டியில் அமோக வெற்றி பெற்ற இந்தியா, இரண்டாவது நாள் போட்டியில் வெற்றியடையுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் டாஸை வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்ததையடுத்து, இந்திய அணி பீல்டிங் செய்து வருகிறது. 

முதலில் இலங்கை அணி சார்பாக களமிறங்கிய அவிஸ்கா பெர்னாடோ - மைனோட் பாணுகா ஆகியோர் அடித்து ஆட தொடங்கியது அணியின் ரன்களை அதிரடியாக உயர்த்தியது. இறுதியில், ராக்கெட் போல உயர்ந்த ஸ்கோர், அவர்களின் விக்கெட்டை சரித்து இந்திய ரசிகர்களை இன்பமுற வைத்தது. அவிஸ்கா பெர்னாடோ 71 பந்துகளில் 50 ரன்கள் அடித்து வெளியேற, பாணுகா 42 பந்துகளில் 36 ரன்கள் அடித்து அவுட்டாகி வெளியேறினார். 

இதனையடுத்து, களத்தில் இறங்கிய பாணுகா ராஜபக்சே 1 பந்தில் ரன்கள் ஏதும் அடிக்காமல் யஷ்வந்தின் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார். பின்னர், களத்தில் டே செல்வா - சாரித் ஜோடி இருந்தது. 27 ஓவரில் 3 விக்கெட்டை இழந்த இலங்கை, 132 ரன்கள் எடுத்திருந்தது. டே செல்வா களத்தில் நின்று ஆட தொடங்கி, அணிக்கு ரன்களை குவிக்கும் கட்டாயத்தில் விளையாடிக்கொண்டு இருந்தார். 

இந்திய அணியை பொறுத்தவரையில் பந்துவீச்சில் சுழற்றி வீசியதால் அவ்வப்போது இலங்கை வீரர்கள் தடுமாறினாலும், விக்கெட்டை தக்கவைத்துக்கொண்டார்கள். சாஹல் 5 ஓவரில் 18 ரன்கள் மட்டுமே அடிக்கவிட்டு 2 விக்கெட்டை கைப்பற்றினார். தீபக் மற்றும் புவனேஸ்வர் தலா 1 விக்கெட் வீதம் எடுத்தனர். இதனால் இலங்கை அணி 27.2 ஓவரில் 4 விக்கெட்டை பறிகொடுத்து, 134 ரன்கள் எடுத்தது. டே செல்வா 45 பந்துகளில் 32 ரன்கள் அடித்து வெளியேறினார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND Vs SL 2 D ODI SriLanka Loss 4 Wickets within 27 Overs


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->