சொந்த மண்ணில் இந்திய அணியின் தொடர் சாதனை | தவிடுபொடியாக்குமா நியூசிலாந்து அணி! - Seithipunal
Seithipunal


கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த டெஸ்ட், ஒருநாள், டி20 என  55 தொடர்கள் நடைபெற்றுள்ளது. இதில், இந்திய அணி இரு நாடுகளுக்கு எதிரான் தொடரில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது.

அதில், 2015-ல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள், டி20 என இரு தொடர்களிலும் இந்தியா தோல்வியடைந்தது. 2019-ல் ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான, டி20, ஒருநாள் என இரு தொடர்களிலும் இந்தியா தோல்வியடைந்தது.

2019 மார்ச் மாதம் நடந்த இந்த தொடருக்கு பின் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடிய ஒரு தொடரிலும் தோற்கவில்லை. 

இந்நிலையில், நாளை நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி மூன்றாவது டி20 ஆட்டத்தில் மோத உள்ளது. ஏற்கனவே இந்த தொடரில் இரு அணிகளும் தலா 1 வெற்றி, தோல்வி பெற்று சாமானில் உள்ளது. 

நாளை நடக்கும் இந்த ஆட்டம் தொடரை வெற்றிகொள்ளும் ஆட்டமாக அமைந்துள்ளது. ஒரு நாள் தொடரை இழந்த நிலையில், இந்த டி20 தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs NZ T20 Final match 2023


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->