இறுதி நேரத்தில் கொண்டாட வைத்த ரோஹித்.. ஆனந்த கண்ணீருடன் ருசிகர பேட்டி.!! - Seithipunal
Seithipunal


இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியானது, நியூசிலாந்து நாட்டில் உள்ள ஹாமில்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் துவக்கத்தில் பேட்டிங் செய்த இந்திய அணி 179 ரன்கள் அடித்திருந்த நிலையில், 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. 

இந்த போட்டியின் இறுதி ஓவரில் நியூசிலாந்து அணிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இறுதி ஓவரை முகமது ஷமி வீசிய நிலையில், முதல் பந்தில் சிக்ஸர் அடித்து நியூசிலாந்து வெற்றியடையும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், ஷமி கென் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லரை அடுத்தடுத்து ஆட்டமிழக்க செய்ய, கடைசி நான்கு பந்துகளில் ஒரு ரன் அடித்தது. 

இதனைத்தொடர்ந்து போட்டி டையில் நிறைவுபெற்றதை அடுத்து, சூப்பர் ஓவர் முறையில் வீரர்கள் களமிறங்கினர். இந்த சூப்பர் ஓவரில் இந்தியாவிற்கு இலக்காக 18 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், முதல் பந்தில் இரண்டு ரன்களும், இரண்டாவது பந்தில் ஒரு ரென்னும் அடித்தனர். இதனையடுத்து அடுத்தது பந்துகளை எதிர்கொள்ள முடியாது திணறி ரசிகர்களை பெரும் பதைபதைப்பிற்கு உள்ளாகினர். 

இறுதியாக கடைசி இரண்டு பந்துகளில் சிக்ஸர் அடித்து ரோஹித் சர்மா இந்திய அணிக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்திருந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் சர்மா தெரிவித்த நேரத்தில், இதற்கு முன்னதாக நான் சூப்பர் ஓவரில் விளையாடியது கிடையாது. முதல் பந்தில் இருந்து ஆட்டத்தை வெளிப்படுத்தலாமா? ரன் எடுத்துவிட்டு ஆட்டத்தை வெளிப்படுத்த இயலுமா? என்ற சந்தேகம் இருந்தது. 

இந்த ஆட்டம் சிறந்த ஆட்டம். மேலும், நான் அவுட்டான விதம் எனக்கு ஏமாற்றத்தை அளித்தாலும், இந்த இன்னிங்ஸை இறுதி வரை கொண்டு செல்ல விரும்பியதால், சிறப்புடன் விளையாடினேன். இந்த தொடரை கைப்பற்றினால் நாங்கள் வெற்றி என்பது எங்களுக்கு தெரியும். அணியின் முக்கிய வீரர்கள் அணியை முன்னெடுத்து சென்றது இதில் முக்கியமானது என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs nz match rohit speech after india won match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->