மரண மாஸ் காட்டிய இந்தியா.. திணறிப்போன நியூசிலாந்து.. இப்படியா ஆகணும்?.. !! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 டி20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 4 ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.  வெலிங்டனில் 4 ஆவது டி20 போட்டி துவங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பௌலிங் தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணியில் ரோகித் சர்மா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு நான்காவது டி20 போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளார். இப்போட்டியில் கேப்டனாக டிம் சௌத்தி செயல்படவுள்ளார்.

முதலில் களம் இறங்கிய லோகேஷ் ராகுல் துவக்கத்தில் நின்று ஆடிய நிலையில், 26 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 5 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், கோலி 9 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

மேலும், ஸ்ரேயாஸ் அய்யர் 7 பந்துகளில் ஒரு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த நிலையில், இதற்கு அடுத்தபடியாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் மனிஷ் பாண்டே ஜோடி களம் இறங்கி விளையாடிய நிலையில், இதன் பின்னர் களமிறங்கிய சிவம் 9 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வாஷிங்க்டன் சுந்தர் 3 பந்துகளில் ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 

இந்த நிலையில், இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இறுதி நேரத்திலாவது ஆட்டம் சூடுபிடிக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வாஷிங்க்டன் சுந்தருக்கு பின்னர் களமிறங்கிய சரத்துள் தாகூர் 15 பந்துகளில் 20 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மனிஷ் பாண்டே மட்டும் நின்று ஆடிய நிலையில் 36 பந்துகளில் 50 ரன்கள் அடித்திருந்தார். யூவேந்திர சாசலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே, நவதீப் சைனி 9 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்தார். இந்த போட்டியின் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு நியூசிலாந்து அணி ஆட்டத்தை துவக்கியது.

இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய மார்ட்டின் குப்தில் மற்றும் கொலின் மொரேனோ ஜோடியில், கொலின் நின்று நிதானமாக அடித்து விளையாடினார். மார்ட்டின் 8 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவே, கொலின் 47 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொலின் - டிம் ஜோடிகள் நின்று ஆடியதை அடுத்து, நியூசிலாந்து அணியின் ரன்கள் மளமளவென உயர்ந்தது. கோலின் ஆட்டமிழந்தவுடன் களமிறங்கிய டாம் ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்த நிலையில், ரோஸ் டைலர் மற்றும் டிம் அதிரடியாக ஆடினர். இறுதியாக ரோஸ் டைலர் 18 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 

இதன் பின்னர் டிம் - டார்யல் மிட்செல் ஜோடி களத்தில் இருந்த நிலையில், 4 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்டது. இறுதிக்கட்ட நேரத்தில் ரசிகர்கள் பெரும் பரபரப்பிற்கு உள்ளாகியிருந்த நிலையில்,  டிம் 39 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து இறுதியில் ஆட்டமிழந்தார். 3 பந்துகளில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்கில் நியூசிலாந்து பேட்டிங் செய்ய, களத்தில் டார்யல் மற்றும் மிட்செல் சாண்ட்னெர் இருந்தனர். அடுத்ததாக பந்தை எதிர்கொண்ட டார்யல் ஆட்டமிழக்கவே, 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்திருந்தனர். பின்னர் மிட்செல் சாண்ட்னெர் - ஸ்காட் களத்தில் இருந்தனர். இறுதியாக ஒரு பந்துகளில் இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு ரன் எடுத்து மிட்செல் சாண்ட்னெர் ரன்னவுட்டானார். இதனையடுத்து சூப்பர் ஓவர் முறையில் வீரர்கள் விளையாட தயாராகியுள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs nz match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->