தாண்டவம் ஆடிய நியூசிலாந்து.! இந்திய அணிக்கு இமாலய இலக்கு.!! தட்டி தூக்கிய குல்தீப்.!!! - Seithipunal
Seithipunal


இந்தியா நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது, மற்றும் கடைசி டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடரை வெல்லும் நோக்கில்,  இந்திய அணிக்கு அதிகபட்ச இலக்கை கொடுக்க தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டிம் சேபெர்ட் 25 பந்துகளில் 3 சிக்ஸர், 3 போர் என அதிரடியாக ஆடி 43 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். 

மற்றும் ஒரு தொடக்க ஆட்டக்காரரான கொலின் முன்றோ (Colin Munro) எடுத்த எடுப்பிலேயே தனது அதிரடி ஆட்டத்தை காட்டினார். பந்துகள் நான்கு புறமும் பறந்தன. முடிந்தவரை இந்திய பந்து வீச்சாளர்களும் விக்கெட்டை கைப்பற்றும் முனைப்பில் தங்களது முழு திறமையும் காட்டி பந்துவீசினர்.

அதிரடியாக ஆடிய முன்ரோ 40 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து குல்தீப் பந்தில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் வில்லியம்சன் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். கிராண்ட்ஹோம் 30 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்துள்ளது. மிச்செல் 19 ரன்னுடனும், டெய்லர் 14 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், கலீல் அகமது, புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, இந்தியாவிற்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, தற்போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் மற்றும் விஜய் சங்கர் களமிறங்கியுள்ளனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND VS NZ 3RD T20 1ST HALF SCORE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->