வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி? இன்று இந்தியா - நியூசிலாந்து முதல் டி20 போட்டி.! - Seithipunal
Seithipunal


இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிராக 3 ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதலில் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ராஞ்சியில் ஜன.27ம் தேதியும், லக்னோவில் ஜன.29ம் தேதியும், அகமதாபாத்தில் பிப்.1ம் தேதி முறையே நடைபெற உள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு ரோஹித் சர்மா கோலி ஆகிய சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது.

இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு ராஞ்சி மைதானத்தில் நடைபெற உள்ளது.

டி20 தொடருக்கான இந்திய அணி:

சுப்மான் கில், இஷான் கிஷன்(வி.கீ), ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா(கே), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சிவம் மாவி, அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜிதேஷ் சர்மா, முகேஷ் குமார், பிருத்வி ஷா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs NZ 1st T20 match today


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->