நியூசிலாந்தை சமாளிக்குமா இளம் இந்திய அணி? முதல் டி20 போட்டி இந்திய அணி பௌலிங் தேர்வு.! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்துள்ளது.

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிராக 3 ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதலில் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ராஞ்சியில் ஜன.27ம் தேதியும், லக்னோவில் ஜன.29ம் தேதியும், அகமதாபாத்தில் பிப்.1ம் தேதி முறையே நடைபெற உள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு ரோஹித் சர்மா, கோலி ஆகிய சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது.

இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு ராஞ்சி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹார்திக் பாண்டியா பௌலிங் தேர்வு செய்துள்ளார்.

அணி விவரம்

நியூசிலாந்து அணி 11 வீரர்கள் :

ஃபின் ஆலன், டெவோன் கான்வே(w), மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர்(c), மைக்கேல் பிரேஸ்வெல், ஜேக்கப் டஃபி, இஷ் சோதி, லாக்கி பெர்குசன், பிளேயர் டிக்னர்.

இந்தியா அணி 11 வீரர்கள் :

இஷான் கிஷன்(w), சுப்மான் கில், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா(c), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சிவம் மாவி, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs NZ 1st T20 match India won the toss choose Bowl


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->