#INDvsENG : இந்திய பந்து வீச்சில் கதி கலங்கிய இங்கிலாந்து அணி.! அடுத்தடுத்து விக்கெட்., அடேங்கப்பா ஆட்டம்.! - Seithipunal
Seithipunal


இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோரி ஜோசப் பர்ன் ரன் ஏதும் எடுக்காமல் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். முதல் ஓவரை வீசிய பும்ரா மெய்டன் விக்கெட் எடுத்துள்ளார். 

அடுத்து களமிறங்கிய Z கிரேவ்லே, D சிப்லே உடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், அதனை முஹமத் சமி தனது பந்து வீச்சில் தகர்த்து எறிந்தார்.  D சிப்லே 70 பந்துகளில் 18 ரன்களுக்கும், Z கிரேவ்லே 68 பந்துகளில் 27 ரன்களுக்கும் முஹமத் சமி பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய ஜாஸ் பட்லர், ராபின்சன் மற்றும் டான் லாவ்ரன்ஸ் டக்-அவுட் ஆக, ஜானி பர்ஸ்டோவ் 27 ரன்களுக்கு வெளியேறினார். அரை சதம் கண்டு நிலைத்து நின்று ஆடிய 'ரூட்' 64 ரன்களுக்கு ஷர்த்ல் தாகூர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 

இறுதியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 65.4 ஓவர்களில், அனைத்து விக்கெட்களையும் இழந்து 183 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.


இந்திய பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுத்த விவரம் :

பும்ரா 4
முஹமத் சமி 3
ஷர்த்துல் தாகூர் 2
முஹமத் சிராஜ் 1


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND Vs ENG Test Match First ODI Update 4 August 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->