INDvsENG : பூம், பூம்.,பும்ரா., மெய்டன் விக்கெட்., இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட்.! - Seithipunal
Seithipunal


இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கி உள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்து வருகிறது.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோரி ஜோசப் பர்ன் றன் ஏதும் எடுக்காமல் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். முதல் ஓவரை வீசிய பும்ரா மெய்டன் விக்கெட் எடுத்துள்ளார். தற்போதுவரை இங்கிலாந்து அணி 16.1 ஓவர்களில், ஒரு விக்கெட் இழப்புக்கு, 16 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்திய அணி விவரம்:

R சர்மா, KL ராகுல், C புஜாரா, V கோஹ்லி, A ரஹானே, R பந்த், R ஜடேஜா, S தாகூர், J பும்ராஹ், M சாமி , M சிராஜ்.

இங்கிலாந்து அணி விவரம்:

R பர்ன்ஸ், D சிப்லே, Z கிரேவ்லே, J ரூட், J பைர்ஸ்டோவ், D லாவ்ரன்ஸ், J பட்டலர், S குர்ரான், O ராபின்சன், S ப்ரோடு, J ஆண்டர்சன் 

இதுவரை சில குறிப்புகள்: 

* இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது சொந்த மண்ணில் இங்கிலாந்தை சந்தித்த இந்திய அணி, அந்த டெஸ்ட் தொடரை 3 - 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 

* இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி இதுவரை 18 முறை மோதி உள்ளது. அதில் மூன்று முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

* இரு அணிகளும் 126 போட்டிகளில் மோதி உள்ளது. அதில் 29 முறை இந்தியாவும், 48 முறை இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளது. அதில் 49 முறை டிராவில் முடிந்தது. 

* இன்று 127வது முறை இரு அணிகளும் மோதுகிறது. சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்திய உத்வேகத்துடன் இந்திய அணி இன்று களமிறங்குகிறது. 

* இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் வீழ்த்திய இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க தயாராக இங்கிலாந்து அணி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs eng test match bumra 1st wicket


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->