இந்தியாவிற்கு பயம் காட்டும் இங்கிலாந்து அணி, 2 அஸ்திரங்களை மீண்டும் அழைத்த நிர்வாகம்!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பிப்ரவரி 5 ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடருக்கான, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்தின் 16 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்த இந்திய அணியும், இலங்கையில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியும் மோதும் டெஸ்ட் போட்டி தொடரானது இந்தியாவில் நடக்க இருக்கிறது. இந்த தொடருக்கான, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது. இலங்கை தொடரில் ஓய்வளிக்கப்பட்ட நட்சத்திர வீரர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ரோரி பர்ன்ஸ் ஆகியோர் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். 

அதே நேரத்தில் ஜானி பேர்ஸ்டோவ், சாம் குர்ரான் மற்றும் மார்க் வூட் ஆகியோர் ஓய்வளிக்கப்பட்டுள்ளனர். ஜோஸ் பட்லர் இந்தியாவில் தொடக்க ஆட்டத்தில் விளையாடி பின்னர் நாடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுளள்து. காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் ஆலி போப் உடற்தகுதியை பொறுத்து அணியில் இணைந்து கொள்வார். முதல் இரண்டு போட்டிகளுக்கு ஓய்வளிக்கப்பட்ட ஜானி பேர்ஸ்டோவ், சாம் குர்ரான் மற்றும் மார்க் வூட் கடைசி இரண்டு போட்டிகளுக்கு இந்தியா திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனவால் பாதிக்கப்பட்ட மொயீன் அலி அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் இருவரும் அபாயகரமான வீரர்கள் என்பதால் இந்தியாவிற்கு கடுமையான சவால் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முதல் இரண்டு டெஸ்ட்களுக்கான அணி: ஜோ ரூட், ஜோஃப்ரா ஆர்ச்சர், மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், டோம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஜாக் கிராலி, பென் ஃபோக்ஸ், டான் லாரன்ஸ், ஜாக் லீச், பென் ஸ்டோக்ஸ், ஆலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND Vs ENG Match 21 June 2020 Update


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->