இந்திய அணியின் 11 பேருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை.! 68 வருடங்களுக்கு பின் நாளை நடக்குமா அந்த அதிசயம்.! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

அதற்கு பதில் அடி கொடுக்கும் விதமாக இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. அடுத்து இரு அணிகள் இடையே 4 டெஸ்ட் கொண்ட தொடர் நாளை தொடங்க உள்ளது. ஆஸ்திரேலிய அணியுடன் நாளை முதல் டெஸ்ட்டில் விளையாடும் 11 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, அஸ்வின் , உமேஷ் யாதவ், முகமது ஷமி, பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  

அறிவிக்கப்பட்டுள்ள இந்தி அணி வீரர்கள் அவைவருமே வலது கை பேட்ஸ்மேன்களாக உள்ளார்கள். இதுபோல் அமைவது கிரிக்கெட் உலகத்தில் அரிது ஆகும். இந்திய அணி கடைசியாக 11 வலது கை பேட்ஸ்மேன்களுடன் ஆடிய டெஸ்ட் ஆட்டம், கடந்த 2015 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டம் ஆகும்.

அதே சமயத்தில் ஆஸ்திரேலியாவில் 11 வலது கை பேட்ஸ்மேன்களுடன் கடைசியாக வெற்றி பெற்ற அணி தென் ஆப்பிரிக்கா ஆகும். இந்த ஆட்டம் கடந்த 1952 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன்பின் நாளை நடக்கும் போட்டியே ஆகும். இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் 68 வருடம் கழித்து நடக்கும் சாதனையாக இது அமையும். 

மேலும், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் கடைசியாக 11 வலது கை பேட்ஸ்மேன்கள் விளையாடிய டெஸ்ட்: பாகிஸ்தான் vs இங்கிலாந்து ஆகும். இது கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த ஆட்டம் ஆகும். 5 வருடங்களுக்கு பின் நாளை இந்த நிகழ்வு நடக்க உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs AUS TEST MATCH 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->