இந்திய-ஆஸ்திரேலிய போட்டியில் இட மாற்றமா?! பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடக்க உள்ளது.

டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி "பாக்சிங் டே" என்று அழைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாக உள்ளது.

மெல்போர்ன் மைதானம் அமைந்துள்ள விக்டோரியா மாகாணத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்த ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி அடிலெய்டுக்கு மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி மெல்போர்னில் உள்ள ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ‘‘ஆஸ்திரேலிய நாட்டின் விளையாட்டு அட்டவணையில் ‘பாக்சிங் டே’ போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. திட்டமிட்டபடி போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

போட்டி நடக்க இன்னும் 4½ மாதங்கள் உள்ளன. அதற்குள் இந்த கொரோனா நிலைமை சரியாகி விடும். நிலைமை சரியானால் மெல்போர்னிலேயே ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs aus test league match update


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->