#INDvsAUS || சம்பவம் செய்யும் சிராஜ்.! தட்டி தூக்கும் தாக்கூர்.! ஆட்டத்தின் தற்போதைய நிலை.! - Seithipunal
Seithipunal


இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு டெஸ்ட் தொடரில் 4-வது ஆட்டம் பிரிஸ்பேனில் நடந்து வருகிறது.  ‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 369 ரன்கள் சேர்த்து.

இந்த ஆட்டத்தில் இந்திய தரப்பில் அறிமுகம் ஆன தமிழகத்தை சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர் தலா 3 விக்கெட்களை எடுத்து அசத்தினர். ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 


 
இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 336 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 33 ரன்கள் பின் தங்கியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 67 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களும் எடுத்து அசத்தினார். 

இதை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆடி வருகிறது. தற்போது வரை ஆஸ்., அணி 7 விக்கெட் இழப்புக்கு, 243 ரன்கள் சேர்த்து (276 ரன் முன்னிலை) ஆடி வருகிறது.

வார்னர் அரை சதம் எடுப்பார் என்ற நிலையில், 48 ரன்கள் எடுத்த போது வாஷிங்கடன் சுந்தர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ஹரிஸ் 38 ரன்னிலும், மார்னஸ் லபுஸ்சேன் 25, மேத்யூ வேட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். 

அதிரடியாக ஆடிய ஸ்டீவன் சுமித் அரை சதம் கண்டு 55 ரன்கள் எடுத்த போது, சிராஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்ட கேமரூன் கிரீன் 30 ரன்னுக்கு தாக்கூர் பந்து வீச்சில் (அவுட்) தாக்கப்பட்டார்.

இந்திய தரப்பில் சிராஜ் 3 விக்கெட்களையும், தாக்கூர் 3  விக்கெட்களையும், வாஷிங்கடன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs AUS 4th test tea break


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->