#சற்றுமுன் : நங்கூரமிட்டு ஆடிய தென்னாபிரிக்கா வீரர்கள்., ஒருவழியாக ஒரு விக்கெட்.!  - Seithipunal
Seithipunal


இந்தியா-தென்னாபிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பார்ல் நகரில் உள்ள மைதானத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.

இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கே எல் ராகுல் - ஷிகர் தவான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

10 ஓவர்கள் ஓவர்கள் வரை விக்கெட் இழப்பு இல்லாமல் 55 ரன்களை இந்த ஜோடி எடுத்திருந்தது. ஆனால், 12-வது ஓவரில் ஷிகர் தவான் (29 ரன்கள்) தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 5 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

பின்னர் கேஎல் ராகுல் உடன் கைகோர்த்த ரிஷப் பண்ட் தனது அதிரடி ஆட்டத்தால் 71 பந்துகளை சந்தித்து, 10 பவுண்டரிகள், 2 சிக்சருடன் தற்போது 85 ரணனுடன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரைத்தொடர்ந்து கே எல் ராகுல் 55 ரங்களுக்கு ஆட்டமிழக்க, ஸ்ரேயாஸ் அய்யர் 11 ரன்னுக்கும், வெங்கடேஷ் அய்யர் 22 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.

கடைசி கட்டத்தில் கைகோர்த்த ஷர்துல் தாகூர் - ரவிச்சந்திரன் அஸ்வின் ஜோடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் அடித்து ஆடினர். இதில் ஷர்துல் தாகூர் 40 ரன்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் 25 ரன்களும் எடுத்தனர். 

இறுதியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்களை சேர்த்தது. இதனையடுத்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், மைதானத்தில் நங்கூரம் இட்டது போல், தங்களது விக்கெட்டுகளை இழக்காமல் அதிரடியாக ஆடி ஆளுக்கு ஒரு அரைசதம் அடித்தனர். 

ஒருவழியாக சற்றுமுன் குவின்டன் டி காக் (66 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி 3 சிக்சருடன்) 78 ரன்கள் எடுத்தபோது ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஒரு வழியாக இந்த பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்துள்ளது.

தற்போது வரை தென் ஆப்பிரிக்கா அணி 29.1 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. இன்னும் 111 ரன்கள் எடுத்தால் இந்த ஆட்டத்தை வெற்றி பெறுவது மட்டுமல்லாமல், தொடரையும்  தென் ஆப்பிரிக்க அணி வென்று விடும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND V SA ONDAY SECOUND MATCH SECOND INNINGS


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->