#INDvsSA || விராட் டக்-அவுட், அடுத்தடுத்து ஆட்டமிழந்த பரிதாபம்.! ஆட்டத்தின் தற்போதைய நிலை.! - Seithipunal
Seithipunal


தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் 31 வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

இந்தியா-தென்னாபிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பார்ல் நகரில் உள்ள மைதானத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.

இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கே எல் ராகுல் - ஷிகர் தவான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

10 ஓவர்கள் ஓவர்கள் வரை விக்கெட் இழப்பு இல்லாமல் 55 ரன்களை இந்த ஜோடி எடுத்திருந்தது. ஆனால் இவர்களின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில், தென்ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சாளர்கள் தங்களது திறமையான பந்து வீச்சை வெளிப்படுத்தினர்.

இதன் பலனாக ஆட்டத்தின் 12-வது ஓவரில் ஷிகர் தவான் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் முப்பத்தி எட்டு பந்துகளை சந்தித்து, இருபத்தி ஒன்பது ரன்களை சேர்த்து இருந்தார். அதில் ஐந்து பவுண்டரிகளும் அடங்கும்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 5 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

கேஎல் ராகுல் உடன் கைகோர்த்த ரிஷப் பண்ட் தனது அதிரடி ஆட்டத்தால் அரைசதம் அடித்துள்ளார். அவர் 51 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் தற்போது வரை 61 ரன்களுடன் ஆடி வருகிறார். கே எல் ராகுல் நாற்பத்தி ஆறு ரன்களுடன் களத்தில் நிற்கிறார்.

தற்போது வரை இந்திய அணி 26.4 ஓவர்களில், 2 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை சேர்த்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND V SA ONDAY SECOUND MATCH


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->