விஸ்வரூபம் எடுக்கும் தோனியின் கிளவ்ஸ் விவகாரம்.! தோனிக்கு துணை நிற்கும் பிசிசிஐ.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மே 30-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா விளையாடிய முதல் போட்டியில் தோனி பயன் படுத்திய கையுறை சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்திய அணியின் வீக்கர்ட் கீப்பர் மகேந்திர சிங் டோனி அணிந்திருந்த கையுறையில் இந்திய துணை ராணுவ சிறப்பு படையின் முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. ஐசிசி யின் விதிப்படி வீரர்கள் மதம்,அரசியல் மற்றும் இராணுவம் போன்ற விஷயங்களை தாங்கள் அணியும் உடைகள் மூலம் வெளிப்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளது. இதனால் தோனியின் கையுறையில் இருக்கும் முத்திரையை நீக்கும்படி கூறியது.

இதனால் பலவிதமான பாராட்டுகளும் எதிர்ப்புகளும் சமூகவலைத்தளங்களில் பரவியது. இந்த முத்திரையின் அர்த்தம் தியாகம் என்பதாகும். பாலிடான் முத்திரையை அணிய துணை ராணுவ கமாண்டோக்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். தோனிக்கு இந்திய ராணுவத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு  கவுரவ லெப்டினன்ட் பதவி அளிக்கப்பட்டது.

மகேந்திர சிங் தோனிக்கு  இந்திய கிரிக்கெட் வாரியம் ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. இனி வரும் போட்டிகளில்  தோனி தொடர்ந்து அந்த கையுறை அணிந்துகொள்ள அனுமதிக்கும்படி ஐசிசிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம்  சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தோனி அணிந்திருப்பது துணை ராணுவ முத்திரை அல்ல என்றும், ஐசிசி விதிமுறைகளை தோனி மீறவில்லை என்றும் பிசிசிஐ நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் கூறினார். 

இந்த விவகாரத்தில் சமூகவலத்தில் பரபரப்பாக பேசப்பட்டாலும் வரும் ஞாயிறு அன்று நடைபெறும் போட்டிக்கு தோனி  அதே கையுறையை தான் தொடர்ந்து பயன்படுத்துகிறார் என தகவல்கள் வெளியாகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

increased clove problem bcci support for dhoni


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->