தத்தளிக்கும் நியூசிலாந்து அணி.! தப்பிக்குமா? இங்கிலாந்து.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து  லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை  இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நியூசிலாந்து.

நியூசிலாந்து அணி 13.4 ஓவரில் 50 ரன்களையும், 21.2 ஓவரில் 100 ரன்னையும் கடந்தது. 100 ரன்னைக் கடந்தபோது நியூசிலாந்து ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. கேன் வில்லியம்சன், நிக்கோல்ஸ் நல்ல நிலைமையில் களத்தில் இருந்ததால் நியூசிலாந்து 300 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. நியூசிலாந்து அணியின் ரன்கள் 103 ரன்னாக இருக்கும்போது வில்லியம்சன் 30 ரன்னில் அவுட் ஆனார். நிக்கோல்ஸ் 55 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். ராஸ் டெய்லர் 15 ரன்கள் எடுத்த நிலையில் நடுவரின் தவறான முடிவால் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார்.

இதனால் 103 ரன்னுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த நியூசிலாந்து. 141 ரன்னுக்குள் மேலும் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது. தற்போது டாம் லாதம் உடன் நீஷம் ஜோடி சேர்ந்துள்ளார். பின்னர் நீஷம் ஆட்டமிழந்தார்  நியூசிலாந்து அணி  43 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் சேர்த்துள்ளது. இதனால் நியூசிலாந்து 250 ரன்களை தாண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in final match lowest score get in newzealand


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->