கேப்டன் விராட் கோலிக்கு தடை?! மீண்டும் கேப்டனாகும் அஜின்க்யா ரஹானே!  - Seithipunal
Seithipunal


இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அடுத்த 2 டெஸ்ட் போட்டி ஆனது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மூன்றாவது போட்டியானது பிங்க் நிற பந்தில் விளையாடப் படும் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற இருக்கிறது. 

இந்த நிலையில் இந்த போட்டியில் விளையாடுவதற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு தடை விதிக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், சிறிது நேரத்திற்கு முன்னதாக அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட்டுக்கு, இந்திய அணி ரிவியூ செய்தபொழுது, அம்பயர் அவுட் கொடுக்க மறுத்ததால் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார் கோலி. 

இதனையடுத்து அம்பயரை மிரட்டுவது, ஆவேசமாக பேசுவது, வாக்குவாதங்கள் செய்வது என்று முறை தவறிய செயல்களை செய்துள்ளதாக அவர் மீது கண்டன குரல்கள் எழுந்துள்ளது. இது போன்ற மோசமான செயல்பாடுகளால், மோசமானவராக களத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் இப்படி ஒரு கேப்டனை பார்த்ததே இல்லை என  என டேவிட் லாயிட் என்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு கண்டிப்பாக தடை விதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். 

இதுதொடர்பாக போட்டியின் நடுவராக இருந்த இந்தியாவின் ஜவகல்ஸ்ரீநாத்திடம் புகார் தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை அவருடைய குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 1 முதல் 4 தண்டனைப் புள்ளிகள் அளிக்கப்படும் என தெரிகிறது. அவர் லெவல் 1 மற்றும் 2 ஆகிய பிரிவுகளில் குற்றம் செய்து உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. 

கடந்த 24 மாதங்களில் அவர் ஏற்கனவே இரண்டு தகுதிநீக்க புள்ளிகளை பெற்று உள்ளார். மேலும் இரண்டு புள்ளிகள் பெற்றால் அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படும். அதனால் அவர் அடுத்த போட்டியில் விளையாட அனுமதிக்கப்படுவாரா அல்லது தண்டனை ஏதும் இல்லாமல் எச்சரிக்கையுடன் விடுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒருவேளை அவர் தடை பெற்றால் அடுத்த போட்டியில் கேப்டனாக, துணை கேப்டனாக இருக்கும் அஜிங்கிய ரஹானே செயல்படுவார் என தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IF Virat kohli get demerit points should ban one test match


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->